2019 புத்தாண்டு தொழில் மற்றும் இதர வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

தொழில் மற்றும் இதர வருமானம்


இந்த வருடம் தொழிலதிபர்கள் நல்ல நேரத்தை காணலாம். நீங்கள் உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் அசையா சொத்துக்களை விற்று கடன்களை அடைக்க இது நல்ல நேரம். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து குறைக்க முயற்ச்சிக்க இது நல்ல நேரம்.
நீங்கள் நல்ல புதுவிதமான யோசனைகளை முன் கொண்டு வருவீர்கள். உங்களுக்கு வங்கிக் கடன் மற்றும் புது முதலீட்டாளர்கள் மூலமாக உங்கள் தொழிலை விரிவு படுத்த ஏப்ரல் 2019 முதல் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எனினும் நீங்கள் உங்கள் தொழிலை விரிவு படுத்த எண்ணினால் உங்கள் பிறந்த சாதக பலன் உங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஏனென்றால் கேது மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் அதிர்ஷ்ட்டத்தை குறைக்கக் கூடும்.


நீங்கள் புது தொழில் தொடங்க எண்ணினால் அல்லது வேறு தொழில் வாய்ப்புகளை பெற எண்ணினால் அதனை மார்ச் 2019 முதல் முயற்சி செய்யலாம். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் கலவையான பலன்களை பெறுவார்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற கமிசன் கிடைக்கும். இந்த வருடத்தின் கடைசி இரண்டு மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.


Prev Topic

Next Topic