2019 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

நிதி / பணம்


உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்த இந்த வருடம் சிறப்பாக உள்ளது. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து பண வரத்தை மார்ச் 2019 முதல் அதிகப்படுத்துவார். மேலும் உங்களது மாதாந்தர கடன் சுமையை குறைக்க நீங்கள் நிதி பரிசீலனை செய்ய இது ஏற்ற நேரம். எந்த தேவையற்ற செலவுகளும் உங்களுக்கு இருக்காது. இது நீங்கள் கடனை மேலும் விரைவாக கட்ட உதவும். உங்கள் கிரெடிட் மதிப்பும் அதிகமாகும்.
ஏப்ரல் 2019 வாக்கில் உங்களுக்கு புது வங்கி கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். சனி பகவான் மற்றும் கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் அதிகம் சேமிக்க எண்ணுவீர்கள். சேமிப்பில் ஆர்வம் அதிகமாகும். நீங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு பண உதவி செய்வதோடு உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். எனினும் உங்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் உங்கள் பணத்தை தவறாக பயன் படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சுருட்டி கையெழுத்தை போடுவதை தவிர்ப்பது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic