2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

ஜனவரி 01, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை உத்தியோகத்தில் வளர்ச்சி ஆனால் குடும்பத்தில் பிரச்சனைகள் (65 / 100)


சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாரு கசப்பான அனுபவங்களையும் மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடும். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனினும் தொடர்ச்சியாக மனதில் அழுத்தம் இருக்கும். உங்கள் குடும்ப சூழலிலும் உறவுகளிலும் எந்த நல்ல மாற்றங்களையும் நீங்கள் இந்த காலகட்டத்தில் எதிர் பார்க்க முடியாது. உங்களுக்கு திருமணம் ஆகிறது அல்லது புதிதாக உறவு கிடைக்கிறது என்றால் நீங்கள் உங்களது பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். காதல் விசயங்களை தள்ளிப் போடவும் அல்லது உங்கள் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதையோ தவிர்ப்பது நல்லது. ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொண்டு இந்த காலகட்டத்தை கடக்க முயற்சி செய்வது நல்லது.
உங்கள் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களை நீங்கள் எதிர் பார்க்கலாம். நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு எதிர் பார்க்கின்றீர்கள் என்றால் அதற்க்கான தக்க சமயம் இது. உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு நல்ல உத்தியோகம் கிடைக்கும். குறிப்பாக மார்ச் 15, 2019 முதல் ஏப்ரல் 2௦, 2019க்குள் நீங்கள் இதை எதிர் பார்க்கலாம். உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் அடுத்த நிலைக்கு உயர பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் அரசியல் குறையும். எனினும் முக்கிய பிரச்சனைகள் தேங்கி உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடும். இது குறிப்பாக உங்கள் சொந்த குடும்ப பிரச்சனைகளால் ஏற்படும். உங்கள் முதலாளி உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். நீங்கள் உங்கள் வேலை சுமையை எளிதாக சமாளிப்பீர்கள்.


உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களது கடன்களை நீங்கள் எளிதாக கட்டி விடுவீர்கள். மேலும் உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் நிலம் அல்லது வேறு விதமான ரியல் எஸ்டேட் சொத்துக்கள் வாங்க எண்ணினால், அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏமாற்றப் பட வாய்ப்பு உள்ளது. பங்கு சந்தை முதலீடு உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு லாபம் தரும். அதனால் எந்த ஒரு முக்கிய நிதி குறித்த முடிவுகள் எடுப்பதாயினும் நன்கு யோசித்து பின் செயல் படுவது நல்லது.


Prev Topic

Next Topic