2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

நவம்பர் 04, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை ஆச்சரியப் படுத்தும் நிவாரணம் (80 / 100)


நவம்பர் 04, 2019 அன்று குரு பெயர்ச்சி நடை பெற உள்ளது. குரு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் இந்த காலகட்டத்தில் சஞ்சரிப்பார். சனி பகவானின் தாக்கம் அடுத்த பெயர்ச்சி வரை, அதாவது ஜனவரி 202௦ சற்று குறைந்து இருக்கும். உங்கள் மன பிரச்சனைகளில் இருந்து அதிர்ச்சியில் இருந்து இந்த காலகட்டத்தில் மீண்டு வருவீர்கள். உங்களுக்கு அதிக நேர்மறை சக்த்திகள் கிடைக்கும்.
உங்கள் குடும்பத்தினர்களை விட்டு நீண்ட காலம் பிரிந்திருந்ததர்க்கு ஒரு தீர்வு கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்களுடன் மீண்டும் சேர்ந்து வாழ நேரம் நன்றாக உள்ளது. புது உறவை அமைத்துக் கொள்ளவும் நேரம் நன்றாக உள்ளது. திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். இயற்கையாகவோ அல்லது IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சை முறையிலோ உங்களுக்கு குழந்தை பேரு கிடைப்பதற்கான பாக்கியம் உள்ளது. திருமணம் நிச்சயம் செய்ய இது ஏற்ற நேரம். சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள்.


அலுவலகத்தில் உங்களது திறமையை நிரூபிக்க பல நல்ல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு பெரிய நிறுவனங்களில் புது வேலை வாய்ப்பு நல்ல சம்பளம் மற்றும் பதவியோடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் அற்புதமான முன்னேற்றத்தை காண்பார்கள். விண்ணைத் தோடும் வளர்ச்சி உங்களுக்கு ஏற்படும். உங்களுக்கு நல்ல பண வரத்து இருக்கும். அதனால் உங்கள் கடன்களை விரைவாக கட்டி விடுவீர்கள். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் உங்களுக்கு வெற்றியைத் தரும்.


Prev Topic

Next Topic