![]() | 2019 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | காதல் |
காதல்
கடந்த வருடம் 2018 நீங்கள் விரும்புபவரை விட்டு நீங்கள் பிரிந்திருக்கக் கூடும். கடந்த வலி மிகுந்த நிகழ்வுகள் உங்கள் தூக்கத்தை பாதித்திருந்திருக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். எனினும் கேது மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் காதல் வாழ்க்கையில் புதிய பிரச்சனைகளை உருவாக்கக் கூடும். இது உங்களுக்கு காதல் வாழ்க்கையில் மற்றுமொரு மோசமான வருடமாக இருக்கக் கூடும். எனினும் நீங்கள் நல்ல சூழலை காண நவம்பர் 2019 வரை காத்திருக்க வேண்டும்.
காதல் விடயங்களை விட்டு விலகி இருந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சற்று ஆறுதலாக உணருவீர்கள். மேலும் நீங்கள் யாரையாவது விரும்புகுரீர்கள் என்றால் அவரிடம் உங்கள் காதல் விருப்பத்தை பற்றி தற்போது பேசாமல் இருப்பது நல்லது. நீங்கள் அவ்வாறு செய்ய எண்ணினால் ஒரு சிறிய மற்றும் ஒன்றும் இல்லா காரணத்திற்க்காக கூட நீங்கள் அவமானப்படக் கூடும். உங்களுக்கு எதிராக இவ்வாறு ஏளனமாக நடந்து கொள்வதால் நீங்கள் பிறர் முன்பு சற்று வருத்தப் படும் சூழல் ஏற்படலாம். ராகு பெயர்ச்சி உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் நிகழ்வதால் மார்ச் 2019 வாக்கில் உங்கள் நண்பர்கள் மூலமாக உங்களுக்கு உதவி கிடைக்கும்.
நீங்கள் குழந்தை பேருக்காக திட்டமிட காத்திருந்தால் உங்களாது பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி நடந்து கொள்வது நல்லது. மருத்துவ சிகிச்சை முறையான IVF மற்றும் IUI நீங்கள் எதிர் பார்த்த பலனைத் தராது. ஏப்ரல் 2019 வாக்கில் சில மாதங்களுக்கு உங்களுக்கு பிரச்சனைகளில் இருந்து சற்று விடுப்பு கிடைக்கும். எனினும் நவம்பர் 2019 மத்தியில் உங்களுக்கு குரு ஜென்ம ராசியை பார்வை இடுவதால் அதிக பலம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic