2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

திரைப்படம், கலை, அரசியல்


திரை நட்ச்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் சனி பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சற்று மன வருத்தத்துடன் காணப் படலாம். எனினும் குரு பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் ராகு 11ஆம் வீட்டில் இந்த வருடம் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு நல்ல சன்மானம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்களுக்கு புதிதாக ஏற்படும் உறவுகளில் அதிக கவனம் தேவை. மேலும் அவர்களுடன் அதிக நெருக்கமாக இருப்பதால் உங்கள் சக்தி குறைய நேரிடலாம். இது குறிப்பாக சனி பகவான் மற்றும் கேது இணைந்து இந்த வருடம் சஞ்சரிப்பதால் ஏற்படுவது. உங்கள் மகா தசை சாதகம் இல்லாமல் இருந்தால் நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடலாம். இது உங்கள் மனதில் தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் உறவுகளிடம் இருந்து விலகி இருந்தால் இந்த வருடம் நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தால் நல்ல மதிப்பை பெறுவீர்கள்.




Prev Topic

Next Topic