Tamil
![]() | 2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு பகவான் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சிறப்பான நிலையில் இந்த வருடம் 2019ல் சஞ்சரிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை தரக் கூடும். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு மார்ச் 2019 முதல் இடம் மாறுவது சிறப்பாக உள்ளது.
கடந்த வருடத்தை விட இந்த 2019ஆம் வருடம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உங்கள் உத்தியோகம், நிதி நிலை மற்றும் முதலீடுகள் நல்ல நிலையில் இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். எனினும் உங்கள் சொந்த வாழ்க்கை பொறுத்த வரையில், முக்கியமாக குடும்பம் மற்றும் உறவுகள் சிறப்பாக இல்லை. பிரணாயாம செய்து, மற்றும் விஷ்ணு சஹசர நாமம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic