![]() | 2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | இரண்டாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் செப்டம்பர் Sep 17, 2019 வரை கலவையான பலன்கள் (50 / 100)
சனி பகவான் மற்றும் குரு இந்த காலகட்டத்தில் வக்கிர கதி அடைகின்றனர். குரு பகவான் ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். ராகு தொடர்ந்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சற்று மந்தமாக இருக்கும். எந்த வளர்ச்சியும் நீங்கள் காண முடியாது. எதுவாக இருந்தால் நீங்கள் சற்று தடைகள் அல்லது தேக்கத்தை எதிர் கொள்ள நேரிடும். உங்களால் தெளிவு இல்லாததால் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுக்க முடியாமல் போகலாம்.
இந்த காலகட்டத்தில் உங்களது மன நிலை சற்று பாதிக்கக் கூடும். குறிப்பாக உங்களது வேலை சுமை மற்றும் சொந்த விசயங்களால் நீங்கள் அதிகம் பாதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைவருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். காதல் விசயங்களுக்கு இது ஏற்ற நேரம் இல்லை. நீண்ட தூர பயணம் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.
உங்கள் வேலை சுமை அதிகரிக்கக் கூடும். மேலும் அதனை நீங்கள் சமாளிக்க முடியாமல் போகலாம். எனினும் உங்களுடைய கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுகளும் சன்மானங்களும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் மேலாளர் உங்களது கடின உழைப்பையும் உற்பத்தியையும் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். தொழிலதிபர்கள் தங்களது ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிப்பதில் மும்மரமாக இருப்பார்கள். மேலும் வேலை ஆட்களை பணிக்கு எடுப்பார்கள். பண வரத்து போதுமான அளவு இருக்கும். அதனால் உங்களது நிதி தேவைகளை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள்.
உங்கள் சேமிப்பை அதிகரிக்க செலவுகள் மீது சற்று கட்டுப்பாடு தேவை. சரியான திட்டம் இல்லாததால் உங்கள் சேமிப்பு விரைவாக கரையக் கூடும். பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு செய்பவர்கள் இழப்பு ஏற்படாமல் இருக்க தங்களது பங்குகளை பாதுகாக்க வேண்டும், முடிந்த வரை ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic