![]() | 2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | மூன்றாம் பாகம் |
செப்டம்பர் 17, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை உணர்ச்சி அதிர்ச்சி (25 / 100)
எதிர் பாரா விதமாக, இது உங்களுக்கு ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும். சனி பகவானின் பாதிப்புகள் மற்றும் கேது உங்கள் 5ஆம் வீட்டில் இணைத்து சஞ்சரிப்பதால் உங்களுக்கு திடீர் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராகு மற்றும் குரு உங்கள் சொந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்ற போதுமான சக்தி இல்லாமல் இருப்பார்கள். உங்களது மன வலி மற்றும் மன அழுத்தம் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கக் கூடும்.
உங்கள் வாழ்க்கை துணைவர், குழந்தைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடனான உங்களது உறவில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினர் யாருடனாவது உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைப்பது சந்தேகமே. நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைவரை விட்டு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாக பிரிய நேரிடலாம். அதனால் அதிக பொறுமையோடு இந்த காலகட்டத்தை கடக்க வேண்டும். காதலர்கள் இந்த காலகட்டத்தில் மனதில் வலியோடு பிரிய நேரிடலாம். நீங்கள் யாரிடமாவது உங்கள் காதல் விருப்பத்தை சொல்ல எண்ணினால் அது உங்களுக்கு மனதை நோகடிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடும். அதனால் உங்கள் காதல் விசயங்களில் சற்று நிதானம் தேவை. உங்கள் மனம் பெரிதும் பாதிக்கப் படக் கூடும். இந்த காலகட்டத்தில் திருமணமோ அல்லது நிச்சயமோ செய்யாமல் இருப்பது நல்லது.
உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நீங்கள் ஒரு நல்ல சூழலை காண்பீர்கள். எனினும் நீங்கள் உங்கள் உத்தியோகத்திற்கு அல்லது நிதி நிலைக்கோ முக்கியத்துவத்தை காட்ட மாட்டீர்கள். உங்கள் சொந்த பிரச்சனைகளால் நீங்கள் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். அலுவலகத்தில் பெண்களால், மேலாளரால் உங்களுக்கு பிரச்சனைகள் வரக் கூடும். மேலும் நீங்கள் உங்கள் நற்பெயரை இழந்து உங்கள் வேலையை ராஜினாமா செய்ய நேரிடலாம். எந்த ஒரு முக்கிய முடிவுகளும் இந்த காலகட்டத்தில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic