![]() | 2019 புத்தாண்டு தொழில் மற்றும் இதர வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | தொழில் மற்றும் இதர வருமானம் |
தொழில் மற்றும் இதர வருமானம்
தொழிலதிபர்கள் இந்த வருடம் சிறப்பாக செயல் படுவார்கள். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களது அதிர்ஷ்ட்டத்தை பல மடங்கு அதிகப் படுத்துவார். சனி பகவான், ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிப்பார். நீங்கள் நல்ல அதிர்ஷ்ட்டம் செய்தவர் என்று உணருவீர்கள்.
உங்களுக்கு நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். மேலும் எந்த பிரச்சனையும் இன்றி உங்களுக்கு பண வரத்து நன்றாக இருக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்கள் போட்டியாளர்கள் உங்கள் முன் சரண் அடைவார்கள்.
உங்கள் தொழிலில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் லாபம் அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும். உங்கள் தொழிலை விரிவு படுத்தி புது யோசனைகளை செயல் படுத்த இது நல்ல நேரம். நீங்கள் உங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடு அலல்து நிதி எதிர் பார்த்தால் அது மார்ச் 2019க்குள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் புது தொழில் தொடங்க முயற்சி செயகுரீர்கள் என்றால் அதற்க்கு இது நல்ல நேரம். சுய தொழில் செய்பவர்கள், மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல் படுவார்கள். உங்கள் செல்வாக்கும் புகழும் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜண்டுகள் நல்ல நிதி சன்மானத்தை பெறுவார்கள். உங்கள் லாபத்தை அக்டோபர் 2019க்கு முன் பணமாக்குவது நல்லது. மேலும் நீங்கள் தொழிலில் ரிஸ்க் எடுப்பதை குறைத்துக் கொண்டு அசையா சொத்துக்கள் மீது அல்லது வேறு பாதுகாப்பான முதலீடுகள் செய்வதை பற்றி என்னலாம்.
Prev Topic
Next Topic