2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

ஜனவரி 01, 2019 முதல் மார்ச் 27, 2019 வரை அதிர்ஷ்ட்டம் நிறைந்திருக்கும் (85 / 100)


குரு மற்றும் சனி பகவான் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு இந்த முதல் பாகத்தில் சிறப்பான அதிர்ஷ்ட்டம் நிறைந்த பலன்களை தருவார்கள். நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். நீங்கள் தொடர்ந்து மணிக் கணக்காக வேலை பார்த்தாலும் சோர்வடைய மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை பெறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் குடும்பம் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும். சுப காரியங்கள் நடத்த இது சிறப்பான நேரம்.
உங்களுக்கு ஏற்ற வரனை பார்த்து திருமணம் செய்ய இது நல்ல நேரம். காதலர்கள் இந்த பாகத்தில் பொற்காலத்தை காண்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். உங்களது நீண்ட கால கனவுகள் இந்த பாகத்தில் நினைவாகும். உங்களுக்கு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால், அதில் வெற்றி காண்பீர்கள. உங்களுக்கு ஒரு பெரிய தொகை செட்டில்மென்ட்டாக கிடைத்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.


உங்கள் உத்தியோகம் பொறுத்தவரை இது ஒரு பொற்காலம். நீங்கள் நல்ல சம்பளத்தோடு மற்றும் பதவி உயர்வோடு அடுத்த நிலைக்கு முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். உங்களது மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்களுக்கு எதிராக எந்த சதி திட்டங்களும் இருக்காது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். புது ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் புதிதாக இருக்கும் தொழிலை எடுத்து நடத்தினாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
உங்கள் நிதி நிலை சிறப்பாக உள்ளது. நீங்கள் உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளி வருவீர்கள். அதிர்ஷ்ட்ட சீட்டை முயற்சி செய்து பார்க்க இது ஏற்ற நேரம். உங்கள் பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு லாபத்தைத் தரும். நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.



Prev Topic

Next Topic