![]() | 2019 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | காதல் |
காதல்
காதல் விடயங்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். நீங்கள் சமீப கடந்த காலத்தில் நீங்கள் விரும்பியவரை விட்டு பிரிந்திருந்தால் அவருடன் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மீண்டும் இணைய இது ஒரு நல்ல நேரம். உங்கள் மனம் புது உறவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும். நீங்கள் காதலில் விழுந்தாலோ அல்லது உங்களுக்கு புதிதாக காதல் விண்ணப்பம் வந்தாலோ அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். மேலும் அது திருமணத்தை நோக்கி செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரனை பார்த்து திருமணம் முடிக்க இது ஏற்ற நேரம். மேலும் திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். குழந்தை பேருக்கு திட்டமிட இது சிறப்பான வருடமாக இருக்கும். மேலும் நீங்கள் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சை முறையையும் முயற்சி செய்யலாம், குடும்பத்தில் புதிதாக குழந்தை பிறப்பது அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்யும். புதிதாக திருமணம் ஆனவர்கள் நல்ல அன்போடும் காதலோடும் இருப்பார்கள். மொத்தத்தின் உங்கள் சொந்த வாழ்க்கையில் செட்டில் ஆக இது ஒரு சிறப்பாக வருடமாக இருக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic