![]() | 2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
இந்த வருடம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும் குரு பகவான் 2ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு பல அற்புதமான பலன்களைத் தருவார்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நீங்கள் பெரிய அளவில் வளர்ச்சியை காணலாம். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் பொறுத்தவரையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டமாகும். மார்ச் 2019ல் வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி உங்கள் வெற்றியை அதிகப் படுத்தும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் கோட்டீஸ்வரராகவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் முக்கியத்தவர் அந்தஸ்த்தையும் அடைவீர்கள். இந்த காலகட்டத்தை பயன் படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செட்டில் ஆகிவிடலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic