![]() | 2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 27, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை கலவையான பலன்கள் (50 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து 2ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 25 2019 அன்று தயும்புகிறார். குரு பகவான் ஆகஸ்ட் 11, 2019 வரை வக்கிர கதி அடைவார். சனி பகவானும் ஏப்ரல் 29, 2019ல் வக்கிர கதி அடைகிறார். எனினும் கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரித்து உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார். இது உங்களுக்கு ஒரு மோசமாக பாகம் என்று சொல்ல முடியாது. எனினும் கடந்த பாகத்தை விட சற்று பலன்கள் குறைந்து காணப் படும். எனினும் நீங்கள் தொடர்ந்து உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.
உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியை கண்டு பிறர் உங்கள் மீது பொறாமைப் படக் கூடும். இது தீய பார்வையாலேயே நடக்கும். நீங்கள் சுதர்சன மகா மந்திரம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும். நீங்கள் யாரையாவது விரும்புகுரீர்கள் என்றால் மே 2019 வாக்கில் சில கருத்து வேறுபாடு உங்களுக்குள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையை சுமூகமாக கடக்க நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்து கருவுற்றிந்தால் உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுக்கு நீரழிவு நோய் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவது சற்று அழுத்தம் நிறைந்த சூழலை ஏற்படுத்தக் கூடும்.
பணியில் இருப்பவர்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை பற்றி சற்று கவனமாக இருக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் விசயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க நேரத்தில் முடிக்க நீங்கள் அதிகம் வேலை சுமையை சந்திக்க நேரிடலாம். எனினும் அதனை சரியாக முடித்து நல்ல மதிப்புகளை பெறுவீர்கள். தொழிலதிபர்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம் எனினும் அது உங்கள் வளர்ச்சியை பாதிக்காது.
இந்த பாகத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருக்கக் கூடும். நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுப் படுத்திக் கொண்டும் சேமிப்பை அதிகப் படுத்த முயற்சி செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மற்றும் ஒப்பந்தல் எதுவும் தற்போது செய்ய வேண்டாம். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெற சற்று தாமதம் ஆகலாம். உங்கள் பங்கு சந்தை முதலீட்டில் சற்று கவனம் தேவை. நாள் வர்த்தகம் உங்களுக்கு மகா தசை சாதகமாக இருந்தால் லாபம் தரக் கூடியதாக இருக்கும். விசா ஸ்டாம்பின் செய்ய வேண்டும் என்றால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து பின் முயற்சி செய்ய வேண்டும். எனினும் விசா ஒப்புதல் பெற சற்று தாமதம் ஆகலாம்.
Prev Topic
Next Topic