![]() | 2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | மூன்றாம் பாகம் |
ஆகஸ்ட் 11, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை பொற்காலம் (95 / 100)
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு இந்த பெயர்ச்சியில் ராஜா யோகத்தை உருவாக்குவார்கள்.இத காலகட்டத்தில் எந்த தாமதமும் இருக்காது. மாறாக நீங்கள் உங்கள் வளர்ச்சியை மற்றும் நிதி நிலையில் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள உடல் நலம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சௌகரியமாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் அவரது வீட்டாருடன் நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர்கள் அதற்க்கான பாக்கியத்தை தற்போது பெறுவார்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.
திருமணம் நிச்சயித்து திருமணம் செய்ய இது ஏற்ற நேரம். உங்கள் காதல் திருமணம் பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் பெரும். காதலர்கள் நல்ல நிவாரணம் பெறுவார்கள். மேலும் தங்களது காதல் விசயங்களில் மகிழ்ச்சியான சூழலை காண்பார்கள். உங்கள் நண்பர்களோடும் குடும்பத்தினர்கலோடும் நீங்கள் மகிழ்ச்சியாக சுற்றுலா மற்றும் விழாக்களில் பங்கு பெறுதல் என்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குழந்தை உங்களுக்கு மகிழ்ச்சியான நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை பெருமைப் பட செய்யும்.
உங்கள் உத்தியோகத்தில் நல்ல வெற்றியைப் பருவீர்கள். நீங்கள் சம்பள உயர்வோடு அடுத்து நிலைக்கு பதவி உயர்வு பெறுவீர்கள். நீங்கள் உயர் பதவியில் இருப்பவர்களுடன் நெருக்கமாவீர்கள். தொழிலதிபர்கள் விண்ணைத் தொடும் வளர்ச்சியை காண்பார்கள். உங்களுக்கு நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். அதனால் நல்ல பண வரத்து ஏற்படும். உங்கள் லாபத்தை பணமாக்க இது ஏற்ற நேரம், மேலும் உங்கள் சொந்த இடத்திற்கு குடி பெயரவும் இது ஏற்ற நேரம்.
உங்கள் நிதி நிலை உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும். உங்களிடம் போதுமான பணம் இருக்கும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் வங்கி கடன் எந்த ஒரு சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு செய்பவர்கள் விண்ணைத் தோடும் லாபத்தை காண்பார்கள். இந்த காலகட்டத்தை பயன் படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகலாம்.
Prev Topic
Next Topic