2019 புத்தாண்டு உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

உத்தியோகம்


உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த வருடம் நல்ல வளர்ச்சியை பெறுவார்கள். நீண்டகாலமாக பதவி உயர்வு பெற காத்திருந்தவர்கள் இந்த வருடம் குறைந்த முயர்ச்சியிலேயே எதிர் பார்த்த வெற்றியை பெறுவார்கள். குரு உங்களது நீண்ட கால ஆசைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்ற உதவி செய்வார். மேலும் புது வேலைக்கு விண்ணப்பித்து முயற்சி செய்ய இது நல்ல நேரம். நீங்கள் குறைந்த முயர்ச்சியிலேயே உங்கள் நேர்காணலில் வெற்றிப் பெறுவீர்கள். மேலும் உங்கள் அலுவலகத்தில் நலல் சம்பளம் மற்றும் சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் புது வேலை நீங்கள் எதிர் பார்த்த இடத்திலேயே கிடைக்கும். மேலும் உங்கள் மேலாளர் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களது கடின உளைப்பிக்கு அங்கிகாரம் கிடைக்கும். மேலும் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு நல்ல சன்மானமும் கிடைக்கும்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் நிர்வாக பொறுப்பில் இருக்கும் வேலை பெறுவீர்கள். உங்களது ஒப்பந்த வேலை நிரந்தரமாகும். உங்களுக்கு ஏதேனும் சட்ட பிரச்சனைகள் சமீப காலத்தில் ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து வரும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. மேலும் உங்களுக்கு காப்பீடு, நல்ல பங்குகள் கிடைப்பது மற்றும், குடியேற்றம் மற்றும் விசா குறித்த பலன்கள் உங்கள் அலுவலகத்தில் இருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் உத்தியோகத்தில் நலல் வளர்ச்சியை பெறுவீர்கள். மேலும் இந்த வருடம் உங்கள் நிதி நிலையில் நல்ல வெற்றியை பெற்றுத் தரும்.




Prev Topic

Next Topic