![]() | 2019 புத்தாண்டு தொழில் மற்றும் இதர வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | தொழில் மற்றும் இதர வருமானம் |
தொழில் மற்றும் இதர வருமானம்
இந்த 2019ஆம் வருடம் உங்களுக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பல அற்புதமான பலன்களையும் முன்னேற்றத்தையும் தருவார். மேலும் புது தொழில் தொடங்க இது நல்ல நேரம். 2௦2௦ ஜனவரி மாதம் வரவிருக்கும் சனி பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு அடுத்த 3 ½ வருடங்கள் சிறப்பாக உள்ளது. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் நல்ல பலன்களை உங்கள் தொழில் குறித்து காண்பீர்கள்.
நீங்கள் மிகவும் அதிர்ஷ்ட்டம் செய்தவர் போல உணருவீர்கள். உங்களுக்கு நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். மேலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்களுக்கு பண வரத்து சீராக இருக்கும். உங்களது மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்கள் போட்டியாளர்கள் உங்களிடம் சரணடைவார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் லாபத்தை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தொழிலை விரிவு படுத்தி புது யோசனைகளை செயல் படுத்த இது நல்ல நேரம். நீங்கள் உங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி எதிர் பார்த்தால் அது உங்களுக்கு மார்ச் 2019க்கு முன் கிடைக்கும்.
சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல் படுவார்கள். உங்கள் செல்வாக்கும் புகழும் உயரும். உங்களுக்கு நல்ல நிதி சன்மானம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களது நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். எனினும் அக்டோபர் முதல் டிசம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் அது சனி பகவான் உங்களது லாப ஸ்தானத்திற்கு ஜனவரி 2௦2௦ வாக்கில் பெயர்ந்த பின் நல்ல தீர்வு பெரும்.
Prev Topic
Next Topic