2019 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


கடந்த வருடம் ஜூன் முதல் செப்டம்பர் 2018 வரை அதிகம் பாதிக்கப் பட்டிருப்பீர்கள். எனினும் நீங்கள் 2018ல் கடைசி இரண்டு மாதங்கள் நல்ல மாற்றங்களை கண்டிருப்பீர்கள். இப்போது உங்கள் வாழ்க்கையின் மோசமான பகுதியை நீங்கள் கடந்து விட்டீர்கள். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல மாற்றங்களை உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்துவார். மேலும் குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது.
உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் பிரச்சனைகளை பற்றி கலந்தாலோசனை செய்து நல்ல தீர்வை பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சனைகளை பற்றி பேசி தீர்வு கண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் தற்காலிகமாக உங்கள் உத்தியோகம் குறித்து, பயணம் அலல்து சொந்த விடயங்களால் உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருந்தால் அவர்களுடன் ஏப்ரல் 2019க்கு முன் சேர்ந்து விடுவீர்கள்.


குடும்பத்தினர்கள் மீண்டும் ஒன்று சேருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குழந்தைகள் நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். இந்த வருடம் திருமணம், புது வீடு புகு விழா, ஆண்டு விழா போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த ஏற்றதாக உள்ளது. உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப சாதனத்தில் சஞ்சரிப்பதால் வரவிருக்கும் வருடங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. மேலும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.



Prev Topic

Next Topic