2019 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

நிதி / பணம்


உங்கள் நிதி நிலை பெருமளவில் உயரும். நீங்கள் சரியான பாதையில் சென்றாலும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டை பார்வை இடுவதால் சில தேவையற்ற பயம் ஏற்படக் கூடும். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்ய இது நல்ல நேரம். உங்கள் கிரெடிட் மதிப்பு உயரும். வங்கிகள் உங்களுக்கு குறைந்த வடியில் கடன் கொடுக்க முன் வருவார்கள். வெளி நாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் பெப்ரவரி, மார்ச், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2019 மாதங்களில் உங்களது அதிர்ஷ்ட்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்கள் செலவுகள் குறையும், வருமானம் அதிகமாகும். நீங்கள் உங்கள் எதிர் காலத்திற்கு தேவையான பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுக்கு தங்க நகைகள் வாங்குவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். அதிகரிக்கும் நிதி நிலை மற்றும் அதில் ஏற்படும் முன்னேற்றம் உங்களுக்கு மன அமைதியைத் தரும். வரவிருக்கும் வருடங்கள் உங்களுக்கு சனி பகவான் உங்கள் ராசியின் லாப ஸ்தானத்திற்கு பெயருவதால் சாதகமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இதனால் நீங்கள் இந்த வருடத்தின் இறுதி பகுதியில் புது வீடு வாங்க முயற்சி செய்யலாம்.


வரவிருக்கும் வருடங்களில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். அதனால் நீங்கள் எந்த பிரச்சனையும் இன்றி உங்கள் கடனை விரைவாக அடைப்பீர்கள். ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் புது வீட்டிற்கு குடி பெயர திட்டமிடலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது.



Prev Topic

Next Topic