2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

ஜனவரி 01, 2019 முதல் மார்ச் 27, 2019 வரை சிறப்பான நேரம் (85 / 100)


இது உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து நேர்மறை சக்த்திகளை குருவின் பலத்தால் பெறுவீர்கள். உடல் உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும்.
உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது தேவைகளை புரிந்து கொள்வீர்கள். உங்கள் குழந்தைகள் தங்களது தவறுகளை உணர்ந்து உங்கள் பேச்சை கேட்க தொடங்குவார்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிப்பீர்கள். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம். காதலர்கள் மீண்டும் இணைந்து நல்ல நேரத்தை தங்களது காதல் வாழ்க்கையில் காண்பார்கள். மீன ராசி பெண்கள் தங்களுக்கு காதல் விண்ணப்பம் வருவதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். திருமணம் ஆனவர்கள் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவார்கள். குழந்தை பேருக்கு திட்டமிட இது ஏற்ற நேரம்.


நீங்கள் தற்போது இருக்கும் வேலையில் மகிழ்ச்சியாக இல்லை என்றால், புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். புது வேலை வாய்ப்பு உங்களுக்கு நல்ல சம்பலத்தொடும் பதவியோடும் கிடைக்கும். உங்கள் மேலாளரிடம் பேசி பதவி உயர்விற்கான முயற்ச்சியை செய்ய இது ஏற்ற நேரம். அலுவலகத்தில் எந்த அரசியலும் இருக்காது. உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உங்கள் முதலாளி உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலதிபர்கள் பொற்காலத்தை இந்த பாகத்தில் காண்பார்கள். உங்களுக்கு பெரிய வாடிக்கையாளர்களிடம் இருந்து நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். பண முதலீடுகள் செய்து உங்கள் தொழிலை விரிவு படுத்த இது நல்ல நேரம்.
நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நீங்கள் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். பயணம் மற்றும் வெளி நாட்டிற்கு குடியேற்றம் போன்றவை உங்களுக்கு நடக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நிதி நிலையில் நீங்கள் சிறப்பாக இந்த பாகத்தில் செயல் படுவீர்கள். உங்கள் செலவுகள் குறையும் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். நீங்கள் உங்களது கடன்களை விரைவாக கட்டி முடிப்பீர்கள். உங்களது கிரெடி கார்டு விண்ணப்பம் ௦% வட்டிக்கு ஒப்புதல் பெரும்.


பங்கு சந்தையில் நீண்ட காலமாக முதலீடு செய்து இருப்பவர்கள் நலல் லாபத்தை காண்பார்கள். ஊக வர்த்தம் செய்பவர்கள் தங்களது பிறந்த சாதக பலனை பார்த்து பின் செயல் படுவது நல்லது. ஏனென்றால் சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம். நீங்கள் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள்.

Prev Topic

Next Topic