![]() | 2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 17, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை நல்ல நேரம், ஆனால் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல் பட வேண்டும் (65 / 100)
நவம்பர் 4, 2019 முதல் குரு நல்ல நிலையில் சஞ்சரிப்பார். குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின் நீங்கள் பெரிதாக எந்த பலனும் எதிர் பார்க்க முடியாது. எனினும் அது மோசமான சஞ்சாரமும் இல்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயர்ந்து இந்த பாகத்தில் சில பிரச்சனைகளை உருவாக்கக் கூடும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அதிக கவனத்தோடு கையாள வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் உயர பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எனினும் எந்த முடிவு எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல் பட வேண்டும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடிற்கு ஜனவறு 23, 2௦2௦ அன்று பெயருவதால் அதன் தாக்கத்தை நீங்கள் இந்த பாகத்தின் இறுதியில் உணருவீர்கள். நீங்கள் முன்னேற்றத்தில் தாமதத்தை உணர்ந்தால் அது சிறிது காலத்திற்கு மட்டுமே இருக்கும். ரிஸ்க்கை தவிர்க்க உடனடி பலன்களை எதிர் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. எனினும் நீண்ட கால திட்டங்கள் 1 முதல் 3 வருடத்திற்கான திட்டங்களை வகுப்பது நல்லது.
நீங்கள் புது வேலை வாய்ப்பை எடுப்பதாயின் நிதி வளர்ச்சியை காட்டிலும் உங்களுக்கு நிலையான உத்தியோகம் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் உங்கள் லாபத்தை பணமாக்கிக் கொண்டு நிர்வாக செலவுகளை குறைத்துக் கொள்ள இது சரியான நேரம். நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் அதனை அக்டோபர் 3௦, 2019க்கு முன் செய்வது நல்லது. நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய போக வேண்டும் என்றால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி முயற்சி செய்வது நல்லது. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு லாபம் தரும். சனி பகவான் உங்கள் லாப ஸ்தானத்திற்கு வருவதால் நீங்கள் பெப்ரவரி 2௦2௦ முதல் உங்கள் வாழ்க்கையில் உயர்வை காண்பீர்கள்.
Prev Topic
Next Topic