![]() | 2019 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வழக்கு |
வழக்கு
ஜூன் முதல் செப்டம்பர் 2018 போன்ற காலகட்டத்தில் உங்களுக்கு சில பண இழப்பு மற்றும் நற்பெயர் பாதிக்கும் வகையில் சூழல் இருந்திருக்கும். மேலும் உங்கள் மனம் பெரிதும் பாதிக்கப் பட்டு நீங்கள் அவமானப் படும் சூழலும் ஏற்பட்டிருக்கும். எனினும் இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இருந்து உங்களுக்கு சாதகமான தீர்வோடு வெளி வருவீர்கள். நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால் உங்களுக்கு நல்ல செட்டில்மென்ட் கிடைக்கும்.
நீங்கள் தற்போது குழந்தை காவல், ஜீவனாம்சம் அல்லது விவாகரத்து போன்ற ஏதாவது வழக்கில் இருந்தால் அதில் இருந்து வரும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் நீதி மன்ற தீர்ப்பால் நீங்கள் ஒரு பெரிய தொகையை பெறவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பூர்வீக சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்ற இது நல்ல நேரம். நீங்கள் சொத்து சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளி வருவீர்கள். சுதர்சன மகா மந்திரம் கேட்டு பெருமாளை வணங்கி வருவது உங்கள் நிதி நிலையில் வெற்றியைத் தரும்.
Prev Topic
Next Topic