2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


இந்த புது வருடம் உங்களுக்கு நல்ல பலன்களோடு தொடங்கும். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேலும் உயருவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வீர்கள். மேலும் நல்ல உறவுகளை வளர்ப்பீர்கள். உங்களுக்கு ஏதாவது சட்ட பிரச்சனைகள் இருந்தால் அதில் இருந்து நல்ல சாதகமான தீர்ப்போடு அல்லது ஒரு தொகை செட்டில்மென்ட்டோடு வெளி வருவீர்கள்.
எந்த உடல் உபாதைகளும் இருக்காது. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள. உங்களது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரத்து அதிகரிக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் முக்கியத்தவர் அந்தஸ்த்தை பெறுவதோடு கோட்டீஸ்வரராகும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 வாக்கில் சில பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவதால் ஏற்படக் கூடும். எனினும் அடுத்த சனி பெயர்ச்சி ஜனவரி 2௦2௦ல் ஏற்பட உள்ளதால் சனி பகவானின் பலத்தால் அது சில காலத்திற்கு மட்டுமே இருக்கும்.


மொத்தத்தில் நீங்கள் உங்களது நீண்ட கால சோதனை காலத்தை முடித்து விட்டீர்கள். இந்த 2019ஆம் வருடம் மற்றும் வரவிருக்கும் அடுத்த இரண்டு வருடங்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களோடு இருக்கக் கூடிய ஒரு நீண்ட காலமாக இருக்கும். நேர்மறை மாற்றங்களோடு நீங்கள் புன்னகையிக்க இது நேரம்.


Prev Topic

Next Topic