2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்]) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

ஆகஸ்ட் 11, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை சிறப்பான நேரம் (85 / 100)


குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த பாகத்தில் நீங்கள் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். சமீப கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் ஒரு முடிவுக்கு வரும். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அது வெற்றியைத் தரும். எந்த உடல் உபாதைகளும் இருக்காது. உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். பலமாக தசைகள் ஏற்படும். நீங்கள் காதலில் விழுந்தாலோ அல்லது உங்களுக்கு காதல் விண்ணப்பம் வந்தாலோ அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
நல்ல வரனை பார்த்து திருமணம் செய்ய இது ஏற்ற நேரம். திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியதோடு இந்த காலகட்டத்தில் இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்கு காத்திருந்த தம்பதியினர் அதற்க்கான பாக்கியத்தை பெறுவார்கள். உங்கள் கனவு சுற்றுலா செல்ல திட்டமிட இது ஏற்ற நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.


நீங்கள் இந்த பாகத்தில் அடுத்தக் கட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் பங்குகள் நல்ல லாபத்தை பெற்றுத் தருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரிய நிறுவனத்தில் இருந்து புது வேலை வாய்ப்பை பெற இது நல்ல நேரம். உங்கள் வேலை சுமையை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்களுடைய லாபத்தை பணமாக்க இது ஏற்ற நேரம். உங்கள் எதிர் காலத்திற்காக நீங்கள் அதிகம் சேமிக்கத் தொடங்குவீர்கள். பங்கு சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம்.


Prev Topic

Next Topic