![]() | 2019 புத்தாண்டு உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | உத்தியோகம் |
உத்தியோகம்
நீங்கள் இந்த 2019ஆம் வருடம் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். குரு உங்களது நீண்ட கால கனவுகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவார். மேலும் புது வேலைக்கு விண்ணப்பிக்க இது நல்ல நேரம். நீங்கள் எளிதாக அதிக முயற்சி இல்லாமல் நேர்காணலில் தேர்ச்சி பெறுவீர்கள். உங்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளம் மற்றும் நல்ல பதவி கிடைக்கும். உங்கள் புது வேலை நீங்கள் எதிர் பார்த்த இடத்தில் கிடைக்கும். மேலும் உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாளர் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கும். நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்த பதவி உயர்வு அதிக முயற்சி இல்லாமலேயே இந்த வருடம் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு நல்ல நிதி சன்மானம் கிடைக்கும்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் உங்களுக்கு நிர்வாகம் செய்யக் கூடிய வேலை கிடைக்கும். உங்களது ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் வேலை நிரந்தரமாகும். உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசு வேளையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு உங்கள் நிறுவனத்தில் இருந்து காப்பீடு, குடியேற்ற பலன்கள், விசா போன்ற விடயங்களில் நல்ல பலன்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும். உங்கள் உத்தியோகத்தில் இந்த வருடம் நல்ல வளர்ச்சியும் நிதி நிலையில் வெற்றியும் ஏற்படுவது உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும்.
Prev Topic
Next Topic