![]() | 2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை கடுமையான சோதனை காலம் (38 / 100)
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் செலவுகளை அதிகப் படுத்தக் கூடும். இது உங்கள் சேமிப்பை விரைவாக கரைக்கும். ஜென்ம சனியின் தாக்கம் உங்கள் உடல் நலத்தில் நீங்கள் காணலாம். அதிக உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பாகத்தில் உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவு பாதிக்கப் படலாம். நீங்கள் அவர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் மற்றும் சண்டையில் ஈடுபடக் கூடும். குடும்பத்தில் அரசியல் அதிகரிக்கக் கூடும். இது உங்கள் மன அமைதியை வெகுவாக பாதிக்கும். நீங்கள் சுப காரியங்கள் நடத்தினாலும் அதிக பதற்றமும் மன அழுத்தமும் ஏற்படும்.
அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சதி திட்டங்களும் அரசியலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் உத்தியோகத்தில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இருக்காது. நீங்கள் அலுவலகத்தில் நிகழும் இந்த கடுமையான சூழ்நிலையை உங்கள் உத்தியோகத்தை காப்பாற்றிக் கொள்ள சமாளித்தாக வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் ஏப்ரல் 2019 வாக்கில் உங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்படலாம். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் நீங்கள் பழி ஏற்கும் சூழல் ஏற்படலாம். நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்கள் விசா அந்தஸ்த்தை ஏப்ரல் 2019 வாக்கில் இழக்கும் சூழல் ஏற்படலாம். தொழிலதிபர்கள் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். போட்டியாளர்களாலும் சிறு காரணங்களாலும் நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டை இழக்கும் சூழல் ஏற்படலாம்.
உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்கப் படக் கூடும். உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் உங்கள் செலவை அதிகரிப்பார்கள். பங்கு சந்தை முதலீடுகள் அதிக நட்டத்தை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் உங்கள் வீட்டை குறைந்த விலைக்கு விற்க நிர்பந்திக்கப் படுவீர்கள். இந்த காலகட்டத்தில் எந்த ரியல் எஸ்டேட் முதலீடுகளும் செய்யாமல் இருப்பது நல்லது. ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பது நல்லது.
Prev Topic
Next Topic



















