![]() | 2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 17, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை எதிர் பாரா பின்னடைவுகள் (25 / 100)
முக்கிய கிரகங்கலான் குரு, சனி பகவான், ராகு, மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். குரு உங்கள் ஜென்ம ராசிக்கு நவம்பர் 4, 2019 அன்று பெயருவதால் தற்போது இருக்கும் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சனி பகவான், குரு, மற்றும் கேது இணைத்து நவம்பர் 4, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை சஞ்சரிப்பதால் எதிர் பாரா பின்னடைவுகள் ஏற்படக் கூடும்.
உங்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கக் கூடும். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் பாதிக்கப் படக் கூடும். அதிக கவனம் தேவை. உங்களுக்கு எதிர் பாராத கெட்ட செய்திகள் வரக் கூடும். நீங்கள் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிப்பதால் அதிகம் வருத்தத்துடன் இருக்க நேரிடும். புது உறவை ஏற்படுத்திக் கொள்வதோ அல்லது திருமணம் செய்வதோ இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. முன்பே சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிட்டிருந்தால் அது தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது.
இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் அதிகம் அரசியல் நிகழ்வதால் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்படலாம். உங்கள் வருமானம் பாதிக்கப் படலாம். நீங்கள் அலுவலகத்தில் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து நீங்கள் தாய் நாடு திரும்பும் நிலை ஏற்படலாம். தொழிலதிபர்கள் எந்த நிவாரணத்தையும் இந்த காலகட்டத்தில் காண முடியாது. பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த முன்னேற்றமும் இன்றி தேக்கம் அடையும். எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதாயினும் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி செயல் படுவது நல்லது.
Prev Topic
Next Topic