2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


இந்த 2019ஆம் வருடம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். சூரியன் உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும் குரு விரைய ஸ்தானத்திலும் ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. கேது உங்கள் ஜென்ம ஸ்தானத்திற்கும் ராகு களத்திர ஸ்தானத்திற்கும் குரு ஜென்ம ஸ்தானத்திற்கும் இடம் மாறுவது உங்கள் பிரச்சனைகளை இந்த வருடம் நாட்கள் நகர நகர அதிகமாக்கக் கூடும்.
முக்கிய கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் நீங்கள் இந்த 2019 வருடம் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். உங்கள் உத்தியோகம் அதிகம் பாதிக்கப் படக் கூடும். வேலை சுமை அதிகரிப்பதும் கடன் அதிகரிபப்தும் உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் ஏப்ரல் 2019 வாக்கில் அல்லது நவம்பர் 2019 வாக்கில் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலும் ஏற்படலாம்.


எனினும் உங்களுக்கு ஒரு நல்ல விடயம் இருக்கும் என்றால் நீங்கள் அக்டோபர் 2019 வரை சுப காரியங்கள் நடத்தலாம். இது உங்கள் செலவுகளையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கக் கூடும். எனினும் குருவின் பலத்தால் அதனை செய்து முடிப்பீர்கள். நீங்கள் பயணம் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் எந்த முடிவும் எடுப்பது நல்லது.


Prev Topic

Next Topic