![]() | 2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | இரண்டாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை நல்ல நிவாரணம் (50 / 100)
கடந்த பாகத்தை விட இந்த பாகம் உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். குரு மற்றும் சனி பகவானின் தாக்கம் சற்று குறையும். அதனால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகள் சற்று குறையும். இதனால் நீங்கள் மூச்சு விட கொஞ்சம் இடம் கிடைக்கும். மேலும் உங்கள் வாழ்க்கையில் சமீப காலத்தில் நடந்த மோசமான விசயங்களை ஜீரணிக்கவும் உங்களுக்கு இடம் கிடைக்கும். தற்போது இருக்கும் நிலையில் இருந்து நீங்கள் கீழே போக மாட்டீர்கள். எனினும் வளர்ச்சியின் வேகம் மற்றும் நிவாரணத்தின் அளவு உங்கள் பிறந்த சாதக பலனை பொறுத்தே உள்ளது.
புது உறவை அமைத்துக் கொள்ள இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்திருந்தால் அடுத்தது என்ன செய்வது என்று தெளிவாக தெரியாமல் இருப்பீர்கள். திருமணம் ஆன தம்பதியினர்கள் அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். நீங்கள் பெண்ணாக இருந்தால் இந்த காலகட்டத்தில் குழந்தை பேருக்கு திட்டமிடுவதை தவிர்பப்து நாளது. நிலுவையில் இருக்கும் வழக்கு எந்த பக்கத்திலும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கும்.
சமீப காலத்தில் நீங்கள் உங்கள் வேலையை இழந்திருந்தால் உங்களுக்கு தற்காலிகமாக அல்லது ஒப்பந்த ரீதியில் வேலை கிடைக்கும். நீங்கள் குறைந்த சம்பளம் என்றாலும் கிடைக்கும் வேலையை செய்வது இந்த நேரத்தில் உங்களது வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். உங்கள் அலுவலகத்தில் தற்போது இருக்கும் பணியில் பெரிதாக ஆர்வம் இன்றி இருப்பீர்கள். உங்கள் குடுமப்த்தினர்களிடம் அதிக நேரம் செலவழித்து அவர்களது பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்கள் இந்த பாகத்தில் நல்ல நிவாரணத்தை பெறுவார்கள். அதிக முதலீடு செய்து உங்கள் தொழிலை விரிவு படுத்துவதை தவிர்ப்பது நல்லது. நிர்வாக செலவுகளை குறைக்க இது ஏற்ற நேரம்.
இந்த பாகத்தில் நீங்கள் பயணம் செய்வீர்கள். எனினும் குடியேற்ற பலன்களை எதிர் பார்ப்பது சற்று கடினமே. உங்கள் நிதி நிலை சற்று ஆறுதல் தரக் கூடியதாக இருக்கும். உங்கள் கடனை நிதி மறு பரிசீலனை செய்து வட்டி விகிதத்தை குறைக்க முயற்சி செய்ய இது ஏற்ற நேரம். யாருக்கும் பணம் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை முதலீடு தற்போது லாபகரமாக இருக்காது.
Prev Topic
Next Topic