![]() | 2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | மூன்றாம் பாகம் |
ஆகஸ்ட் 11, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை சுப காரியங்கள் நிகழ்த்தலாம் (65 / 100)
சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரிபப்து உங்கள் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் அதிகப் படுத்துவார்கள். எனினும் குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் சுப காரியம் நிகழ்த்துவதில் அதிக மும்மரத்தொடு இருக்க செய்வார். உங்களுக்கு நல்ல தூக்கம் இல்லாமல் இருக்கலாம். இது குறிப்பாக உங்கள் குடும்பத்தில் தேவைகள் மற்றும் கடமைகள் அதிகரிப்பதால் ஏற்படும். நீங்கள் திட்டமிட்டதை விட சுப காரியங்கள் நிகழ்த்த செலவுகள் அதிகமாகக் கூடும். இதனால் நீங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சூழலை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் பயண செலவுகள் அதிகரிக்கக் கூடும். நீங்கள் உங்கள் விருந்தினர்களை உபசரிப்பதில் அதிகம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். காதலர்கள் தங்களது பிரச்சனைகளை சரி செய்வதில் அதிகம் மும்மரமாக இருப்பார்கள்.
அலுவலகத்தில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். நீங்கள் சொந்த அகாரனன்களால் அதற்க்கு அதிக நேரம் எடுத்துக் கொல்வேஎர்கல். இது உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கக் கூடும். தொழிலதிபர்கள் சற்று தாமதத்தை காண நேரிடும். உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பது நல்லது.
நீங்கள் அசலை விட வட்டிக்கு அதிக பணம் கட்டுவீர்கள். அதனால் உங்கள் கடன் உயர்ந்து கொண்டே போகும். முடிந்த வரை செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் புது முதலீடுகளோ அல்லது லாட்டரி சீட்டு முயற்சி செய்வதோ தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic