![]() | 2019 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
ஜென்ம சனி நடப்பதால் வர்த்தகத்தில் உங்களுக்கு பெரிதாக எந்த அதிர்சட்டமும் ஏற்படாது. சாதகமற்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு வர்த்தகத்தில் இருந்து கிடைக்கும் லாபத்தை பெரிதும் பாதிக்கக் கூடும். சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது உங்கள் அதிர்ஷ்ட்டத்தை முற்றிலுமாக துடைத்து விடக் கூடும். நீங்கள் ஊக வர்த்தகம் செய்வதானால் அது இந்த வருடம் பெரிய பண இழப்பை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவராக இருந்தாலும் பெரிய நட்டம் உங்கள் முதலீட்டால் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் குடும்பத்தினர் கட்டாயத்தால் நீங்கள் புது வீடு அல்லது வாகனம் வாங்க கட்டாயப் படுத்தப் படுவீர்கள். நீங்கள் அத்தகைய முதலீடுகளை தவிர்ப்பது நல்லஹ்டு. ஏனென்றால் நீங்கள் சந்தை விலையை விட அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். அது உங்கள் நிதி நிலையை பெரிதும் பாதிக்கக் கூடும். அதிர்ஷ்ட்ட சீட்டு மற்றும் சூதாட்டத்தில் பணம் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. அது உங்களுக்கு பெரிய அளவில் பண இழப்பை ஏற்படுத்தக் கூடும்.
Prev Topic
Next Topic