![]() | 2019 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
முக்கிய கிரகங்கள் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பயணம் உங்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அது உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தி சேமிப்பை கரைக்கக் கூடும். எனினும் உங்களால் குடும்ப காரணங்களுக்காக பயணம் செய்வதை தவிர்க்க முடியாது. நீங்கள் தொலை தூர பயணம் செய்ய முயற்ச்சித்தால் அல்லது வெளி நாட்டு பயணம் செய்தால் உங்களுக்கு நல்ல தாங்கும் வசதி கிடைப்பது சற்று சந்தேகமே. மேலும் நீங்கள் பயணத்தின் பொது சோர்வடையக் கூடும். உங்கள் தொழில் குறித்த பயணம் எதிர் பார்த்த பலனை தராமல் போகலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் அவர்களை நீங்கள் உபசரிப்பது, வெளியே கூட்டி செல்வது மற்றும் அவர்களுக்கு பயண சீட்டு முன் பதிவு செய்வது என்று பல செலவுகள் உங்களுக்கு ஏற்படக் கூடும்.
நீங்கள் வெளி நாட்டில் பனி புரிபவராக இருந்தால் உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஏப்ரல் 2019 வாக்கில் நீங்கள் உங்கள் தாய் நாடு திரும்பும் சூழலும் ஏற்படக் கூடும். இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள், அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் 2019 வரை உங்களுக்கு விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் சற்று மோசமாக உள்ளது. பெப்ரவரி 2௦2௦ வரை நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்காமல் எந்த குடியேற்றம் பலன்கள் குறித்த முயற்ச்சியையும் செய்யாமல் இருப்பது நல்லது. நீங்கள் விசா ஸ்டாம்பின் செய்ய வெளி நாட்டிற்கு பயணம் செய்ய நேரிட்டால், உங்கள் சோதிடரை அணுகி ஆலோசனை பெற்று அதன் பின் நீங்கள் முயற்சி செய்வது நல்லது.
Prev Topic
Next Topic