2019 புத்தாண்டு உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

உத்தியோகம்


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு மோசமான மாதமாக இருக்கும். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து அதிகம் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். ஏப்ரல் 2019 வாக்கில் விடயங்கள் மோசமாகக் கூடும். இது குறிப்பாக அலுவலகத்தில் ஏற்படும் அரசியலால் ஏற்படக் கூடும். மேலும் நீங்கள் அவமானப் படும் சூழலும் ஏற்படும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம்.
நீங்கள் எந்த விதமான பதவி உயர்வையும் சம்பள உயர்வையும் எதிர் பார்க்க முடியாது. உங்கள் மேலாளர் நீங்கள் மேலும் அதிகம் வேலை பார்க்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார். உங்கள் முதலாளி உங்களை அதிகம் கண்காணிப்பார். எனினும் உங்களுக்கு அலுவலகத்தில் இருக்கும் சூழலை அனுசரித்து நடந்து கொள்வதை விட வேறு எந்த வாய்ப்பும் இல்லை. உங்கள் வேலையை தற்போது மாற்றுவதை பற்றி நினைக்க வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வதே நல்லது.


நீங்கள் அதிகம் பயணம் செய்யக் கூடிய வேலை செயகுரீர்கள் என்றால், உங்களால் நேரத்தை சரியாக திட்டமிட முடியாமல் போகலாம். நீங்கள் உங்கள் வேலை குறித்து வாடிக்கையாளரை சந்திக்க அனேக நேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் பலவீனமான சூழலை அவர்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு வளர்ச்சி அடைய முயற்சி செய்வார்கள். உங்களுக்கு எதிராக சதி திட்டங்கள் நடக்கக் கூடும். இதனால் நீங்கள் அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2019 வரை உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம்.
நீங்கள் வெளி நாட்டில் பனி புரிபவராக இருந்தால், உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அதனால் நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு ஏப்ரல் 2019 வாக்கில் குறுகிய காலத்திற்கோ அலல்து நவம்பர் 2019 வாக்கில் நிரந்தரமாகவோ உங்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழல் ஏற்படலாம். உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து சோதிடரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு பின் விசா ஸ்டாம்பிங் செய்வதை பற்றியோ அல்லது குடியேற்ற பலன்கள் பெறுவதை பற்றியோ முயற்சி செய்யலாம்.



Prev Topic

Next Topic