![]() | 2019 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கல்வி |
கல்வி
குரு உங்கள் ராசியின் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கக் கூடும். உங்களுக்கு போதுமான சத்து கிடைக்காது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மேலும் உங்களுக்கு நோய் உடனடியாக தொற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படலாம், உங்கள் சக்த்திகள் விரைவாக குறையும். உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். இது உங்கள் படிப்பை பெரிதும் பாதிக்கக் கூடும்.
நீங்கள் கடுமையாக உழைத்து பரிச்சையில் நல்ல மதிப்பென்களை பெற வேண்டும். நீங்கள் 1௦ அல்லது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவராக இருந்தால், தற்போது கடினமான நேரத்தை சந்திக்க நேரிடும். உங்களால் விளையாட்டில் சிறப்பாக செயல் பட முடியாமல் போகலாம். நீங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் உங்களை தவறான வழியில் கொண்டு செல்லக் கூடும். ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. விடயங்கள் நவம்பர் 2019க்கு மேல் சற்று நல்ல நிலையில் மாறக் கூடும்.
Prev Topic
Next Topic