![]() | 2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2019 முதல் மார்ச் 27, 2019 வரை பெரிதாக எந்த நிவாரணமும் இல்லை (30 / 100)
2018ல் சில மாதங்கள் நீங்கள் அதிகம் இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். எதிர் பாரா விதமாக இந்த பாகத்திலும் பெரிதாக நேர்மறை பலன்கள் இல்லை. நீங்கள் சிறிய வேலை பார்த்தாலும் உடனடியாக சோர்வடைந்து விடுவீர்கள். உங்கள் சக்தி விரைவாக குறையும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால் உங்களுக்கு எளிதாக நோய் தோற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் உடம்பில் உள்ள கொழுப்பு சத்து, சர்க்கரை அளவு மற்றும் இரத்தக் கொதிப்பின் அளவை பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். உங்கள் மாணவி/கணவன் உடல் நிலை மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நிலை பாதிக்கப் படக் கூடும். போதுமான மருத்துவ காப்பீடு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். நீங்கள் உங்கள் மகன் அல்லது மகளுக்கு தக்க வரன் தேடுகுரீர்கள் என்றால் நீங்கள் எதிர் பாரா விசயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர் பார்க்காத கெட்ட செய்திகளை உங்களுக்கு கொண்டு வரக் கூடும். புது உறவை ஏற்படுத்திக் கொள்ள அல்லது திருமணம் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் அவரது குடும்பத்தினர்களுடன் வாக்குவாதம் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏதேனும் வழக்குகளில் நீங்கள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகலாம்.
உங்கள் வேலை சுமை அதிகரிக்கக் கூடும். அலுவலகத்தில் அரசியல் மற்றும் உங்களுக்கு எதிராக சதி அதிகமாக இருக்கக் கூடும். உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால் நீங்கள் இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையை இழக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை எதிர் பார்க்காமல் இருப்பது நல்லது. எனினும் உங்கள் வால்வாதாரத்திர்க்காக நீங்கள் உங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு தற்போது உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். நீங்கள் நேர்க்காணலில் தேர்ச்சி பெறாமல் போகக் கூடும். அது உங்களது தன்னமிக்கை அளவை குறைக்கக் கூடும். தொழிலதிபர்கள் எதிர் பாராத பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்காமல் இருப்பது நல்லது.
உங்கள் நிதி பிரச்சனைகள் மோசமாகக் கூடும். உங்கள் செலவுகள் சேமிப்பை விரைவாக கரைக்கக் கூடும். மேலும் நீங்கள் வழக்கு காரணங்களால் மற்றும் உங்கள் பங்குகள் அல்லது சொத்துக்கள் ஏதேனும் விற்க முயற்சி செய்யும் போது அது குறித்த சில ஆவணங்கள் தொலைந்து விட்டதை அறிந்து மேலும் நீங்கள் செலவுகள் செய்ய நேரிடலாம். உங்கள் கடன்களை விற்க நீங்கள் உங்கள் நிலம், வீடு விற்க நேரிடலாம். எனினும், ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.
Prev Topic
Next Topic