2019 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

காதல்


காதலர்கள் அக்டோபர் 2019 வரை ஜென்ம குரு நடப்பதால் அதிக சவால்களை சந்திப்பார்கள். நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடும் சில சண்டைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் மனதளவில் அதிகம் சோர்ந்து போவீர்கள். இதனால் உங்கள் காதல் வாழ்க்கையில் சில பின்னடைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் காதல் விடயங்களால் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் திருமணம் செய்து கொள்ள எண்ணினால் நவம்பர் 2019 வரை காத்திருக்க வேண்டும் அல்லது உங்கள் பிறந்த சாதக பலன் வேண்டும்.
நீங்கள் விரும்புபவரிடம் உங்கள் காதல் விருப்பத்தை கூற இது ஏற்ற நேரம் இல்லை. அது உங்கள் மனதை வருத்தப் படக் கூடிய நிகழ்வை ஏற்படுத்தக் கூடும். மேலும் நீங்கள் உங்கள் நண்பர்கள் முன்பு அவமானப் படும் சூழலையும் ஏற்படுத்தக் கூடும். அது உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடும். நீங்கள் புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் என்றால் உங்களுக்கிடையே அன்யுனியம் குறைந்து காணப் படும். உங்கள் மனைவி/கணவனை புரிந்து கொள்வது உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். மேலும் நீங்கள் நம்பிக்கையை ஏற்படுத்த அதிக பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


குழந்தை பேருக்குத் திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ முறைகள் உங்களுக்கு சாதகமான பலனைத் தராது. அது தேவையற்ற நேரம் மற்றும் பணத்தை விரையமாக்கும். நீங்கள் அவசர முடிவுகள் எடுப்பத்தால் அது உங்கள் உறவை பாதிப்பதோடு தற்காலிகமாக நீங்கள் பிரியும் சூழலையும் ஏற்படுத்தக் கூடும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு வாழ்க்கையின் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க வேண்டும்.


Prev Topic

Next Topic