2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை நல்ல நிவாரணம் (55 / 100)


ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கும், கேது 2ஆம் வீட்டிற்கும் மார்ச் 9, 2019ல் இடம் மாறுகிறார்கள். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் ஆதி சரமாய் சஞ்சரிப்பார். இந்த பாகத்தில் குரு வக்கிர கதி அடைந்து உங்கள் ஜென்ம ராசிய்க்கு மீண்டும் பெயருவார். சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து உங்கள் பிரச்சனைகளை குறைக்க உதவி செய்வார்.
உங்கள் உடல் நல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுக்கு தக்க மருந்து கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். உங்கள் மனதில் பலம் பெற்று உங்கள் வாழ்க்கையில் நடப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதன் தாக்கம் குறையும். எனினும் பிரிந்த தம்பதியினர்கள் சேர இது நேரம் இல்லை. நீங்கள் சில காலம் காத்திருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால் குழந்தை பேரு பெற திட்டமிடுவதை தள்ளிப் போடுவது நல்லது . இந்த பாகத்தில் நிச்சயம் அல்லது திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.


நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு குறைந்த சம்பளத்திற்கு தற்காலிகமாக வேலை கிடைக்கும். உங்கள் வேலை சுமை பற்றும் அழுத்தம் சுமாராக இருக்கும். நீங்கள் விசா மற்றும் குடியேற்றம் குறித்த விசயங்களில் சில முன்னேற்றங்களை காண்பீர்கள். உங்கள் நிதி நிலை சற்று ஆறுதலாக இருக்கும். வங்கி கடன் மற்றும் நண்பர்களிடம் இருந்து உதவி போன்றவற்றால் நீங்கள் உங்கள் நிதித் தேவைகளை சமாளிப்பீர்கள். மேலும் உங்கள் கடனை அடைப்பீர்கள். பங்கு சந்தை முதலீட்டை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் எந்த அதிர்ஷ்ட்டமும் ஏற்படாது. ஊடக துறையில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். தங்களை சுற்றி ஏற்படும் வதந்திகளை சாமர்த்தியமாக கையாளுவார்கள்.


Prev Topic

Next Topic