2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஆகஸ்ட்11, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை கடுமையான சோதனை காலம் (25 / 100)


இந்த பாகத்தில் ஏழரை சனியின் கடைசி காலகட்டத்திலும் ஜென்ம குருவின் அதிக தாக்கத்திலும் நீங்கள் இருப்பீர்கள். ராகு மற்றும் கேது தங்களது பெயர்ச்சியில் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. விசயங்கள் முற்றிலுமாக உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். நீங்கள் உங்களது மனோ பலத்தை அதிகரித்து கடவுள் வழிபாடு செய்து உங்கள் வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
உங்கள் உடல் நிலை பாதிக்கக் கூடும். உங்கள் சொந்த பிரச்சனைகள் மன அமைதியை பாதிக்கக் கூடும். காதலர்கள் அதிக வலி மிகுந்த உறவுடன் இருப்பார்கள். நீங்கள் அதிகம் உடைமை உடையவராக இருப்பவராக இருந்தால், இது அதிக மன அழுத்தத்தையும் மனோ ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும். உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால் நீங்கள் பிரியவும் நேரிடலாம்.


நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை களிக்க நேரிடலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் உறவினர்கள் முன்பு அவமானப் படும் சூழல் ஏற்படலாம். பொய்யான வதந்திகள் உங்கள் பெயரை பாதிக்கக் கூடும். உங்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப் படலாம்.
அலுவலகத்தில் அரசியல் அதிகமாக இருப்பதால் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம். உங்கள் மீது சரியாக நீங்கள் பனி புரியவில்லை என்று நோட்டிசும் விடப் படலாம். அலுவலகத்தில் நீங்கள் அதிகம் அவமானப் படும் சூழல் ஏற்படுவதால் நீங்கள் உங்கள் வேலையை விட்டு விட நினைப்பீர்கள். எனினும் இந்த காலகட்டத்தில் வளர்ச்சிக்காக முயற்சி செய்வதை விட உங்கள் வாழ்வாதாரத்திற்காக உங்கள் வேலையை பாதுகாத்துக் கொள்வது அவசியம். தொழிலதிபர்கள் அதிக நிதி அழுத்தத்தை காண நேரிடலாம். உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் சூழலும் ஏற்படலாம்.


உங்கள் நிதி நிலை பொறுத்தவரையில் இது ஒரு சவால் மிகுந்த காலகட்டமாக இருக்கும். நீங்கள் அசலை விட அதிக வட்டி கட்டுவீர்கள். நீங்கள் உறவினர்களிடம் இருந்து கடன் வாங்கி இருந்தால் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். நீங்கள் பங்கு சந்தை முதலீடு செய்திருந்தால் அது பெரிய நட்டத்தை ஏற்படுத்துவதோடு ஒரே இரவில் உங்கள் சொத்தையும் இழந்து விடும் நிலையை ஏற்படுத்தக் கூடும்.

Prev Topic

Next Topic