2019 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


அக்டோபர் 2019 வரை நீங்கள் தொலைதூர பயணம் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருப்பது உங்களுக்கு அதிக தனிமையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக் கூடும். உங்கள் தொழில் குறித்த பயணம் உங்களுக்கு நேரம் மற்றும் பண விரையத்தை மட்டுமே ஏற்படுத்தக் கூடும். முடிந்த வரை வெளி நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குறுகிய தூர பயணம் கூட உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் உங்களுக்கு செல்லும் இடத்தில் சௌகரியமான தாங்கும் வசதி கிடைக்காமல் போகலாம்.
உங்கள் மனோ பலத்தை அதிகரிக்க நீங்கள் புண்ணிய தளங்களுக்கும் கோவில்களுக்கும் செல்ல திட்டமிடலாம். மேலும் பயன் சீட்டு, தாங்கும் விடுதி போன்றவற்றை முன் பதிவு செய்வதில் உங்களுக்கு சலுகைகள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் சுப காரியங்களில் கலந்து கொள்ள எண்ணினால் அது உங்கள் குடும்பத்தில் பிரச்சனையை அல்லது அரசியலை ஏற்படுத்துவதோடு நீங்கள் அவமானப் படும் சூழலையும் ஏற்படுத்தக் கூடும்.


நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் மார்ச் 2019 அல்லது செப்டம்பர் 2019 வாக்கில் உங்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழல் ஏற்படலாம். உங்களுக்கு கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியேற்றம் போன்ற குடியேற்ற பலன்கள் தற்போது கிடைக்காமல் போகலாம். நீங்கள் வெளி நாட்டிற்கு விசா ஸ்டாம்பிங் செய்ய பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து உங்கள் சோதிடரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு பின் முயற்சி செய்வது நல்லது.



Prev Topic

Next Topic