2019 புத்தாண்டு உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

உத்தியோகம்


இந்த வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் தற்போது இருக்கும் வேலையில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். அலுவலகத்தில் அதிகரிக்கும் அரசியல் உங்களை பெரிதும் பாதிக்கும். உங்கள் உத்தியோகத்தில் எந்த வளர்ச்சியும் தற்போது ஏற்படாது. உங்கள் முதலாளி உங்கள் வளார்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டார். உங்கள் வேலை சுமை மற்றும் அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் தொடர்ந்து 24/7 வேலை பார்த்தாலும் உங்களால் உங்கள் மேலாளரை மகிழ்விக்க முடியாது. நீங்கள் இடமாற்றம், காப்பீடு, விசா, குடியேற்றம் போன்ற சலுகைகளை உங்கள் நிறுவனத்திடம் இருந்து எதிர் பார்த்தால் அது உங்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமேத் தரும்.
உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். நீங்கள் அலுவலகத்தில் பல இன்னல்களை சந்தித்தாலும் அதில் இருந்து உங்களால் விடுபட முடியாமல் போகலாம். நீங்கள் உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு ஏறப்டுத்தும் பிரச்சனைகளை பற்றி உங்கள் மேலாளரிடம் புகார் கூறினால் அது உங்களுக்கே திரும்பி பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும். உங்கள் மறைமுக எதிரிகளால் நீங்கள் அதிகம் இன்னல்களுக்கு ஆளாகக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் மார்ச் 2019 அல்லது செப்டம்பர் 2019 வாக்கில் உங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்படும். மேலும் நீங்கள் வெளி நாட்டில் இருப்பவராக இருந்தால் உங்கள் விசா அந்தஸ்த்தை நீங்கள் இழந்து தாய் நாடு திரும்பும் சூழலும் ஏற்படலாம்.




Prev Topic

Next Topic