2019 புத்தாண்டு தொழில் மற்றும் இதர வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

தொழில் மற்றும் இதர வருமானம்


குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல செய்தி. நீங்கள் உங்கள் புதுமையான யோசனைகளை வெளி கொண்டு வருவீர்கள். அது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் மொத்த லாபம் இந்த வருடத்தின் முதல் 3 காலாண்டுகளில் அதிகரிக்கும். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். உங்களுக்கு வெளி நாட்டில் இருந்தும் பணம் வரும். புது முதலீட்டாளர்களிடம் இருந்தும் வங்கி கடன் மூலமாகவும் நிதி கிடைக்கும்.
எனினும் ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த காலகட்டத்தில் அஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது புது தொழில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் சாதக பலனை பார்க்காமல் உங்கள் தொழிலை விரிவு படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல் படுவார்கள்.


இந்த மாதத்தின் கடைசி இரண்டு மாதங்கள், அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 உங்களுக்கு சோதனை காலமாக இருக்கும். நீங்கள் பிறரின் சதியாலும் சட்ட பிரச்சனைகளாலும் அவதிப் படக் கூடும். நிதி இழப்புகள் அக்டோபர் முதல் டிசம்பர் 2019 வரையிலான காலகட்டங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


Prev Topic

Next Topic