2019 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் பொறுத்தவரையில் இந்த வருடம் நீங்கள் கலவையான பலன்களை காண்பீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் இந்த வருடம் முழுவதும் இருப்பார். கேது மற்றும் சனி பகவான் இணைந்து மார்ச் 2019 முதல் இந்த வருடம் முழுவதும் சஞ்சரிப்பார்கள். எனினும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைத்து நல்ல பலன்களைத் தருவார்.
அக்டோபர் 2019 வரை எந்த மறைமுக எதிரிகளின் பிரச்சனைகளும் இருக்காது. நீங்கள் உங்கள் மனைவி /கணவனிடம் மற்றும் குடும்பத்தினர்களிடம் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவீர்கள். உங்கள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளை காண்பீர்கள். குடும்பத்தினர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். அனைவரும் ஒன்று கூடுவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் நல்ல மரியாதையை பெறுவீர்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு நல்ல வரனை காண்பீர்கள். நிச்சயம், திருமணம், புது வீடு புகு விழ, ஆண்டு விழாக்கள் போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம்.



மேல் கூறியுள்ள சிறப்பான பலன்களை நீங்கள் அக்டோபர் 2019 வரை பெறுவீர்கள். எனினும் நவம்பர் மாறும் டிசம்பர் 2019 வாக்கில் உங்கள் குடும்பத்தில் சில புது பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இதனால் சற்று பின்னடைவுகள் ஏற்படக் கூடும். அக்டோபர் 15, 2019க்கு முன் சுப காரியங்கள் நிகழ்த்துவது நல்லது.




Prev Topic

Next Topic