![]() | 2019 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு மற்றும் செவ்வாய் இந்த 2019ஆம் வருடம் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். அதனால் உங்கள் நிதி நிலை பெரும் அளவு முன்னேற்றம் பெரும். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்ய இது நல்ல நேரம். இதனால் உங்கள் வட்டி விகிதத்தை குறைக்கலாம். எனினும் எவ்வளவு விரைவாக நீங்கள் கடனில் இருந்து மீண்டு வருகுரீர்கள் என்பது உங்கள் பிறந்த சாதக பலனை பொறுத்தே இருக்கின்றது. சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களால் முற்றிலுமாக கடனில் இருந்து வெளி வர முடியாமல் போகலாம்.
உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பண வரத்து பல வழிகளில் இருந்தும், வெளி நாட்டில் இருந்தும் வரக் கூடும். நீங்கள் உங்கள் கடன்களை விரைவாக அடைப்பீர்கள். இது உங்கள் கிரெடிட் மதிப்பை அதிகரிக்கும். உங்கள் வங்கி கடன் விரைவாக ஒப்புதல் பெரும்.
எனினும் நவம்பர் 2019 முதல் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் செலவுகள் அதிகரிக்கக் கூடும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நீங்கள் ஏமாற்றப் படலாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic