2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

ஜனவரி 01, 2019 முதல் மார்ச் 27, 2019 வரை சிறப்பான நேரம் (85 / 100)


இது உங்களுக்கு ஒரு சிறப்பான நேரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணைவர் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை உருவாக்குபவர்களை நீங்கள் தள்ளி வைப்பீர்கள். மீண்டும் நல்ல ஆரோக்கியத்தையும் சக்தியையும் பெறுவீர்கள். சட்ட பிரச்சனைகளில் நல்ல தீர்வுகளையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.
இந்த காலகட்டத்தில் ஏற்ற வரனை பார்த்து திருமணத்தை நிச்சயிப்பீர்கள். திருமணம் ஆன தம்பதியினர்கள் தங்களுக்குள் இருந்து கருத்து வேறுபாட்டை சரி செய்து நல்ல மகிழ்ச்சியான உறவு நிலையை பெறுவார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தை பெறுவார்கள். உங்கள் அலுவலகத்தில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும்.


தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். உங்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். அதனால் பண வரத்து அதிகரிக்கும். எனினும் அஷ்டம சனி நடப்பதால் உங்கள் தொழிலை விரிவு படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உங்களது நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு வங்கி கடன் ஒப்புதல் பெரும். உங்கள் கடன் சுமை குறையும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் பங்கு சந்தை முதலீடுகள் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் முதலீடுகள் செய்வது லாபத்தை ஏற்படுத்தும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்யலாம்.



Prev Topic

Next Topic