2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

செப்டம்பர் 17, 2019 முதல் டிசம்பர் Dec 31, 2019 வரை சோதனை காலம் (30 / 100)


சனி பகவான் செப்டம்பர் 17, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு நவம்பர் 4, 2019 அன்று இடம் மாறுகிறார்., சனி பகவான், குரு மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் நவம்பர் 4, 2019 அன்று சஞ்சரிக்கின்றனர். இது உங்களுக்கு மோசமான நேரமாக இருக்கும். உங்களுக்கு எதிர் பாராத கெட்ட செய்திகள் வரக் கூடும். பிரச்சனைகளின் தாக்கம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையின் இந்த மோசமான காலகட்டத்தை கடக்க வேண்டும்.
செப்டம்பர் 17, 2019க்கு முன்பே சுப காரியங்களை நிகழ்த்தி விடுவது நல்லது. அதன் பின் முயற்ச்சிக்க வேண்டாம். இந்த வருடத்தின் கடைசி இரண்டு மாதங்கள், நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 உங்கள் வாழ்க்கையின் சவால் நிறைந்த மாதமாக இருக்கும். நீங்கள் ஏதாவது புது உறவை ஏற்படுத்திக் கொண்டால் அல்லது நீண்ட கால கடமைகள் ஏதேனும் ஏற்றுக் கொண்டால் அது எண்ணியபடி நடக்காது. காதலர்கள் பிரிய நேரிடலாம் அல்லது உங்களது உறவில் மோசமான சூழ்நிலை மற்றும் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும். இல்லை என்றால் தற்காலிகமாக பிரிய நேரிடலாம் அல்லது சட்ட ரீதியான சண்டைகள் ஏற்படலாம்.


அலுவலகத்த்ல் அரசியல் ஏற்படுவதால் உங்கள் உத்தியோகம் பாதிக்கப் படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்படலாம். நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து மீண்டும் தாய் நாட்டிற்கு நிரந்தரமாக திரும்பும் சூழல் ஏற்படலாம். நல்ல ஆலோசகரின் ஆலோசனை பெற்று இந்த காலகட்டத்தை பாதுகாப்பாக கடக்க உதவி பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் ஏற்படும் நிதி நிலை உங்களுக்கு மகிழ்ச்சி தராது. தொழிலதிபர்கள் எதிர் பாராத பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம். ஊக வர்த்தகம் நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.


Prev Topic

Next Topic