![]() | 2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், கலை, அரசியல்
திரை நட்ச்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். மறைமுக எதிரிகளால் எந்த பாதிப்பும் இருக்காது. உங்களது கடினமான உழைப்பிற்கு ஏற்ற அங்கிகாரம் மற்றும் நிதி, சன்மானம் கிடைக்கும். உங்கள் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெரும். உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். குறிப்பாக ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2019 வரை உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், ஒரு பக்க ஒப்பந்தம் மட்டுமே செய்வதால் உங்களுக்கு வரவேண்டிய தொகையில் நிலுவை அல்லது ஒரு பங்கு மட்டுமே வரும். எனினும் தற்போது நீங்கள் வேலை பார்க்கும் ப்ரோஜெக்ட்டில் சிறப்பாக செயல் படுவீர்கள். பண வரத்து தொடர்ந்து ஏற்படுவதாலும், புகழ் அதிகரிப்பதாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியலில் இருப்பவர்கள் மற்றும் பட தயாரிப்பாளர்கள் அஷ்டம சனி நடப்பதால் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களது பிறந்த சாதக பலன் நன்றாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic