2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 குறிப்பிட தக்க பின்னடைவுகள் (40 / 100)


சமீப கடந்த காலத்தில் உங்களுக்கு கிடைத்த நிவாரணம் மற்றும் வளர்ச்சியால் ஏற்பட்ட மகிழ்ச்சி முடிவுக்கு வரும். குரு பகவான் உங்கள் ராசியின் அஷ்டம ஸ்தானத்தில் ஏப்ரல் 25, 2019 வரை சஞ்சரித்து மீண்டும் விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த காலகட்டத்தில் அஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். மறைமுக எதிரிகளால் அதிகம் பாதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்று உங்களால் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கும்.
நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த முயற்சி செய்தால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். சதி திட்டங்கள் உங்களுக்கு எதிராக நடப்பதால் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் நீங்கள் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படக் கூடும். இது உங்களது மன அமைதியை பாதிக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், பெற்றோரோகள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணைவர் வீட்டார்களுடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் உங்களது உடல் நலம் பாதிக்கப் படக் கூடும். நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை கழிக்க நேரிடலாம்.



இந்த காலகட்டத்தில் உங்களது வேலை சுமை அதிகரிக்கும். எனினும் உங்களது கடுமையான உழைப்பிற்கு உங்களுக்கு சன்மானம் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்களது ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிப்பதில் மும்மரமாக இருப்பார்கள். மேலும் புது வேலை ஆட்களை பணிக்கு எடுப்பார்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல் படுவீர்கள். உங்கள் கடன் தேவைகளை சமாளிக்க போதுமான பண வரத்து இருக்கும்.


பயணம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்றவற்றிற்காக நீங்கள் திகம் செலவு செய்வீர்கள். உங்கள் எதிர் காலத்திற்காக நீங்கள் அதிகம் சேமிக்க வேண்டும். நீண்ட காலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு எதிர் பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். பங்கு சந்தையில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது.

Prev Topic

Next Topic