2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்\) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

ஆகஸ்ட் 11, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை குடும்பத்தில் மகிழ்ச்சி (80 / 100)


அதிர்ஷ்ட்டத்தோடு சிறப்பான பலன்கள் கிடைக்கக் கூடிய நல்ல நேரம் இது. எதுவாக இருந்தாலும் நீங்கள் நல்ல லாபத்தோடு வெற்றியையும் பெறுவீர்கள். எந்த உடல் உபாதைகளும் இருக்காது. உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். நல்ல சக்திகளை ஈர்ப்பீர்கள். நீங்கள் காதலில் விழுந்தாலோ அல்லது உங்களுக்கு காதல் விண்ணப்பம் வந்தாலோ அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
உங்களுக்கு ஏற்ற வரனை நீங்கள் கண்டறிந்து திருமணம் செய்து கொள்வீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இந்த காலகட்டத்தில் இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்க்கான பாக்கியத்தை பெறுவார்கள். உங்களது நீண்டகால சுற்றுலா செல்லும் கனவை தற்போது நிறைவேற்றலாம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.


உத்தியோகத்தில் அடுத்த நிலைக்கு முன்னேறுவீர்கள். உங்களுக்கு விருதுகள், போனஸ் மற்றும் நல்ல சன்மானமும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் பணியில் சேர இது நல்ல தருணம். உங்கள் வேலை சுமையை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் ஈட்ட இது சிறந்த நேரம். உங்களது நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு லாபம் தரும். புது வீட்டிற்கு குடி பெயர இது ஏற்ற நேரம்.


Prev Topic

Next Topic