![]() | 2019 புத்தாண்டு உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | உத்தியோகம் |
உத்தியோகம்
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் உத்தியோகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனினும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அஷ்டம சனியின் தாக்கத்தை சற்று குறைத்து நல்ல பலன்களை தர வாய்ப்பு உள்ளது. இந்த 2019ஆம் வருடம் உங்களுக்கு ஒரு சிறந்த முன்னேற்றத்தைத் தரும்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் பல நல்ல மாற்றங்களை காண்பீர்கள். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்தால் அது உங்களுக்கு எளிதாக கிடைத்து விடும். எனினும் அதிக சம்பளத்திற்கு பேரம் பேசாமல் கிடைப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அஷ்டம சனி நடப்பதால் அவ்வாறு அழுத்தமான கோரிக்கைகள் வைக்கும் போது அது உங்களுக்கு கிடைக்காமலும் போக வாய்ப்பு உள்ளது. ரிஸ்க் எடுத்து வெளி நாட்டிற்கு பெயர இது நல்ல நேரம்.
செப்டம்பர் 2019 வாக்கில் உங்களுக்கு அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயர வாய்ப்பு உள்ளது. எனினும் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை சமாளித்துதான் ஆகா வேண்டும். குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு நவம்பர் 4, 2019ல் பெயர்ந்த பின் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் உத்தியோகத்தை நவம்பர் அல்லது டிசம்பர் 2019 வாக்கில் முக்கிய கிரகங்கள் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இழக்கும் வாய்ப்பு உள்ளது.
Prev Topic
Next Topic