2019 புத்தாண்டு தொழில் மற்றும் இதர வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

தொழில் மற்றும் இதர வருமானம்


இந்த வருடம் தொழிலதிபர்களுக்கு எச்சரிக்கை தரக்கூடிய வருடமாக இருக்கும். உங்கள் தொழிலை நல்லபடியாக நடத்த உங்களுக்கு பிறந்த சாதக பலன் தேவை. இல்லை என்றால் இந்த வருடம் உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்கப் படலாம். மேலும் முக்கிய கிரகங்களான ராகு, கேது, குரு மற்றும் சனி பகவான் செப்டம்பர் 2019 வாக்கில் உங்களுக்கு எதிராக நகரும் போது உங்கள் வங்கி கணக்கு திவாலாகும் நிலையம் ஏற்படலாம். நீங்கள் உங்களுடைய நீண்ட கால மற்றும் மதிப்பு மிகுந்த வாடிக்கையாளர்களை சதி மற்றும் அரசியலால் இழக்க நேரிடலாம்.
உங்கள் கண்காணிப்பு இல்லாமல் அலுவலகத்தில் விடயங்கள் சரியாக இருக்காது. பணிகள் சரிவர நடக்காது. உங்கள் போட்டியாளர்கள் உங்களது பலவீனமான சூழலை அவர்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வார்கள். உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெற தாமதம் ஆகும். முதலீட்டாளர்கள் உங்களது புதுமையான யோசனைகளை கேட்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி வாங்க அதிகம் அழுத்தம் கொடுப்பார்கள். மேலும் நீங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த வருடம் நீங்கள் சில சட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தால் பெரிதாக மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic